Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா… 3 ஒன்றியத்தில்… 239 தபால் வாக்குகள் செல்லாதா?

3 மாவட்ட ஒன்றியத்தில் தபால் வாக்குகளில் அதிகப்படியான செல்லாத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவில்  76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இரண்டாவது கட்ட வாக்குபதிவில் 77.73 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.பதிவான வாக்குகள் அனைத்தும்  315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு, இன்று காலை 8 மணியளவில் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், பதவிகளுக்கான நிறங்கள் வாரியாக மாவட்ட ஊராட்சி வார்டு – மஞ்சள், ஊராட்சி ஒன்றிய வார்டு தலைவர் – பச்சை, சிற்றூராட்சி வார்டு தலைவர் – இளஞ்சிவப்பு, கிராம ஊராட்சி வார்டு – வெள்ளை, நீலம் எனப் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டுவருகின்றன. தபால் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

அதன்படி தருமபுரி ஏரியூர் ஒன்றியத்தில் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கையின் போது 135 வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை திருப்புவனம் ஒன்றியத்தில் 60 வாக்குகளில் 58 வாக்குகள் செல்லாது என்றும், நாமக்கல் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 118 வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் அதிகம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |