Categories
அரசியல் மாநில செய்திகள்

”இட்லிக்கு சட்னி இல்லை” வாக்குவாதத்தால் வாக்கு எண்ணிக்கை தாமதம் …!!

இட்லிக்கு சட்னி இல்லை என்று வாக்கு என்னும் ஊழியர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது.

வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

காலை உணவு வழங்கப்படாததால் வேதாரண்யம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், அரியலூர் ஜெயங்கொண்டம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், தி.மலை மாவட்டம் ஆரணி ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணியில் தாமதமாக நடைபெற்றது. அதே போல திருவள்ளூர் சோழபுரத்தில் காலை உணவு தராததால் வாக்கு எண்ணாமல் ஊழியர்கள் வெளிநடப்பு  செய்துள்ளனர்.

மேலும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு காலை உணவு வழங்கவில்லை எனக்கூறி வாக்கு எண்ணும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இட்லிக்கு சட்னி சாம்பார் வராததால் வாக்கு எண்ண மாட்டோம் என்று ஊழியர்கள் வாக்குவாதம் நடைபெற்று செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |