உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது
ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதேசமயம் பெரும்பாலான இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் வென்னத்தூர் ஊராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஹேமலதா வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாரியப்பன் 19 வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொங்கராயன் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட திமுக பிரமுகர் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் திருவாரூர் மாவட்டம் மாவட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டஷகிலா வீரமணி வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் 1-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மனோகரன் வெற்றி பெற்றுள்ளார்.