தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை பேரூராட்சியில் 1,000, 2,000, 3,000 என இருந்த ஓட்டு மதிப்பு தற்போது ரூ.5,000-ஆக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க., கட்சியினர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தலைவர் பதவியை பிடித்தே ஆக வேண்டும் என்ற ஆதங்கத்தில் களமிறங்கியுள்ளனர். இதனால் அங்குள்ள வாக்காளர்களுக்கு தற்போது மெகா ஜாக்பாட் அடித்தது போல் உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் புடவை போன்ற பரிசுப் பொருள்களும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.