நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டரில் இர்ஃபான் அகமது என பெயரை மாற்றியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் புதுமையான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது எஃப்ஐஆர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அவரே தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான ரைசா வில்சன், ரேபா மோனிகா மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் முதலியோர் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம் நேற்று ரிலீஸாகிய நிலையில் பாசிட்டிவ்வான கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது யூசர் நேம்மில் இர்ஃபான் அகமது என மாற்றி இருக்கிறார். இவர் திரைப்படத்தின் முன்னேற்றத்திற்காக தனது பெயரை மாற்றியிருக்கிறார் என கூறப்படுகிறது.