Categories
உலக செய்திகள்

திக்.. திக்.. திக்…! “நடுவானில் பறந்த விமானம்”…. எட்டிப்பார்த்த “ராஜநாகம்”…. பீதியடைந்த பயணிகள்….!!

மலேசியாவிலிருந்து ஏர் ஆசியா விமானம் ஒன்று கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட சில மணி நேரத்திலேயே பயணிகள் அமரும் இருக்கைகள் மேல்பகுதியில் பாம்பு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவிலிருந்து ஏர் ஆசியா விமானம் ஒன்று கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே கூச்சிங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பயணிகள் அமரும் இருக்கைக்கு மேல் பகுதியில் ராஜநாகம் ஒன்று எட்டிப் பார்த்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பீதியடைந்துள்ளார்கள்.

இவ்வாறு இருக்க பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானிகள் விமானத்தை பாதியிலேயே கூச்சிங்கில் அவசரமாக தரையிறக்கியுள்ளார்கள். இதுகுறித்து ஏர் ஆசியா விமானத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான லியாங் கூறியதாவது, அழையா விருந்தாளியாக வந்த பாம்பினால் கூச்சிங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் மீண்டும் கூடிய விரைவில் கோலாலம்பூர் நோக்கி புறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |