பணத்தை சேமிப்பதற்கு தொடர் வைப்பு நிதி ஆனது சிறந்த ஒன்றாகும். பணத்தை சேமிக்க முடியாத நிலை மற்றும் மாத வருமானத்தில் ஒரு சிறிய குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க இந்த RD கணக்கு தொடங்குவதன் மூலம் சேமிக்கலாம். மேலும் இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் செயலியை பயன்படுத்தி வந்தால் ஆன்லைன் மூலமாக தொடர் வைப்பு நிதியை சேமிக்கலாம். அப்படி இல்லையெனில் நாம் விரும்பிய தபால் அலுவலகம் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கேஒய்சி ஆவணங்கள் மற்றும் டெபாசிட் சமர்ப்பிப்பதன் மூலம் RD கணக்கை திறக்கலாம்.
ஆன்லைனில் திறப்பதற்கான சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை தனி நபர்கள் உள்நுழைவு சான்றுகளை பெற்ற பிறகு அஞ்சல் அலுவலகத்தில் நெட் பேங்கிங் சேவையைப் பயன்படுத்த பதிவு செய்ய வேண்டும். நீங்கள் பதிவு செய்து உங்கள் கணக்கை செயல்படுத்திய பின்னரே இந்த சேவை உங்களுக்கு கிடைக்கும் மேலும், இதற்காகhttps://ebanking.indiapost.gov.in இதைப் பக்கத்திற்கு செல்லவும். பயனர் ஐடி மற்றும் உள்நுழைவு கடவுச்சொல்லை பயன்படுத்த வும். மெனுவில் கிடைக்கும் “பொது சேவை” என்பதை கிளிக் செய்து சேவை கோரிக்கையை கிளிக் செய்யவும்.
சேவை கோரிக்கை என்பதன் கீழ் புதிய கோரிக்கையை தேர்வுசெய்யவும். பின் RD கணக்குகள் ஒரு RD கணக்கை திற என்பதை கிளிக் செய்யவும். மேலும் புதிய பக்கத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். சமர்ப்பி என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்தில் விவரங்களை சரிபார்க்கவும். மேலும் உங்கள் பரிவர்த்தனை கடவுச்சொல்லை உள்ளிடவும். இவை வெற்றி அடைந்ததும் அதை கணக்கில் முழுவிவரங்கள் முதிர்வு தேதி மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் டெபாசிட் செய்யப்படும் தொகை ஆகியவை அங்கு காண்பிக்கப்படும்.
மேலும் விவரங்கள் புதுப்பிக்கப்படும். மாதாந்திர வைப்புத் தொகைக்கான குறைந்தபட்ச தொகை ரூபாய் 100.குறைந்தபட்சம் 10 ரூபாயுடன் தொடங்கிய ஆண்டுக்கு 5.8 வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒருமுறை சேர்க்கப்படும் இந்த கணக்கு துவங்கிய நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சி அடையும்.