தமிழக அரசு தேர்வாணையம், தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தகுதியான நபர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தி வருகிறது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டது. அதோடு மட்டுமில்லாமல் குரூப்-2, 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 21 நபர்களுக்கான Interview வருகின்ற பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் பொதுப்பணியில் அடங்கிய 2-ஆம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பதவிக்கு தேர்வான 570 நபர்களுக்கு மே 6, 7 ஆகிய தேதிகளில் முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.