Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்!…. இந்த மாவட்டங்களில் இன்று ( பிப்.13 ) மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே கனமழை காரணமாக நேற்று திருவாரூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று ( பிப்.13 ) காலை 10 மணி வரை நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் கன மழையும், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வரும் நிலையில் இன்றும் தென்மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |