Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி ( 2022 ) தேர்வாளர்களே!…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டின் இறுதியில் நடப்பாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் 32 வகையான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் 2022-ல் பிப்ரவரி மாதம் குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் இந்த ஆண்டு முதல் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்கள் எடுத்துச் செல்லப்படும் வாகனம் இனிமேல் GPS மூலம் கண்காணிக்கப்படும். அதேபோல் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க OMR சீட்டில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரங்கள் தனியாக பிரிக்கப்படும்.

அதன் தொடர்ச்சியாக அரசுப்பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களை 100% ஈடுபடுத்தவும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கவும் “தமிழ் மொழித்தேர்வு” டிஎன்பிஎஸ்சி தேர்வில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நிரந்தர பதிவு ( OTR ) வைத்துள்ள தேர்வர்கள் உங்களுடைய ஆதார் எண்ணை அதனுடன் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அரசு பணிகள் தேர்வாணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் இனி நடைபெற இருக்கும் அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் OTR கணக்கு மூலமாகவே தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைப்பது குறித்த கூடுதல் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் 18004190958 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |