தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறக்கூடிய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு “பள்ளி பரிமாற்றம் திட்டம்” எனும் திட்டமானது சில வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, கிராமத்தில் உள்ள மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள ஏதாவது ஒரு பள்ளிக்கு சென்று முகாமிட்டு அங்குள்ள வசதிகள், கற்பித்தல் முறையை அறிந்து கொள்வார்கள். மேலும் நகரின் முக்கியமான இடங்களை சுற்றிப் பார்ப்பார்கள்.
அதேபோன்று நகர்ப்புற மாணவர்கள் கிராமத்திற்கு சென்று அங்குள்ள பள்ளியில் முகாமிட்டு, கிராமத்தின் வாழ்க்கை முறை, இயற்கை காட்சிகளை ரசிப்பர். கடந்த 2 வருடங்களாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தாத நிலையில், இந்த ஆண்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 1,000 ரூபாய் வீதம், 1.64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது..