ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 164 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று இரவு 11.34 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும் இது 140 கிலோமீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவில் 4.5 ஆகவும் பதிவாகியுள்ளது. இதில் வீடு மற்றும் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்த போதும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.