சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு நாளை (பிப்.14) முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
இதையடுத்து அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கவும், இரவு கோவில் வனப்பகுதியில் தங்குவதை தவிர்த்து பக்தர்கள் உடனே திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் எதிர்பாராத அடிப்படையில் கனமழை பெய்தால் பக்தர்கள் மலை ஏறுவது நிறுத்தி வைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.