Categories
உலக செய்திகள்

ஊருக்கே கட்டுப்பாடு தனக்கு இல்லையா!! வலுக்கும் நெருக்கடி …. அனுப்பப்பட்ட நோட்டீஸ் …..

கொரானோ  விதிமுறைகளை மீறியதன் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக  ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அந்த வகையில் இங்கிலாந்திலும்  கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த சமயத்தில், பிரதமர் இல்லம்   மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்ட விவகாரம் அந்நாட்டின் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக லண்டன் போலீஸ் விசாரணை தொடங்கியபோது ,போரிஸ் ஜான்சன் இந்த சம்பவத்திற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார். ஆனாலும் இந்த விவகாரத்தில் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என அவரது சொந்தக் கட்சியினரே வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் காரணமாக அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா விதிமுறையை மீறிய விவகாரத்தில் போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகள் குறித்த உண்மையான விவரங்களை வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |