மானியம் அல்லாத சமையல் உருளை விலை ரூ.19 அதிகரித்துள்ளது. இது 2.6 சதவிகித உயர்வாகும். கடந்த நான்கு மாதங்களுடன் ஒப்பிடும்போது சமையல் எரிவாயு உருளை ரூ.139.50 காசுகள் அதிகரித்துள்ளன.
அந்த வகையில் டெல்லியில் மானியம் அல்லாத 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளை ரூ.695லிருந்து ரூ.714 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தா, சென்னை முறையே ரூ.684.50, ரூ.734 என உள்ளது.
கடை உள்ளிட்ட உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ சமையல் எரிவாயு உருளை டெல்லியை பொறுத்தமட்டில் ரூ.1211.50லிருந்து ரூ.1,241 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தா, மும்பை, சென்னையில் முறையே ரூ.1308, ரூ.1190, ரூ.1363 ஆக உள்ளது.
சமையல் எரிவாயு உருளை (எல்.பி.ஜி.), விமான எரிபொருள் ஆகியவற்றின் விலை மாதத்தின் தொடக்கமான ஒன்றாம் தேதி சர்வதேச விலைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.