நடிகர் அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தமிழக அரசின் கொரோனா தட்டுப்பாடு தளர்வால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலுள்ளார்கள்.
தமிழ் திரையுலகில் தல என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜீத் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் வலிமை படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா நடித்துள்ளார். இதனையடுத்து வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள வலிமை படத்தினை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இவ்வாறு இருக்க தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக குறைத்து வரும் நிலையில் வருகின்ற பிப்ரவரி 16 ம் தேதியிலிருந்து திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என்று தெரிவித்துள்ளது. இதனால் அஜீத் ரசிகர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.