Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் சிக்கிய பணம்…. உரிய ஆவணம் இல்லை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி  மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் சுந்தரபாண்டி என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூபாய்  1  லட்சத்து 50 ஆயிரத்தை  மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து சிவகாசி நகராட்சி அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |