Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவர் 169″…. “இதெல்லாம் தலைவரால் மட்டும்தான் பண்ண முடியும்”…. மாஸ் காட்டும் ரஜினி ரசிகர்கள்….!!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 பிரோமோ வீடியோ யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இது வசூலில் வெற்றி அடைந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. இதனால் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு கவனமாக கதை கேட்டு வந்தார். இடையில் தனது மகளான ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து காரணமாக ரஜினி சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனைக் கேட்ட ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். இந்நிலையில் தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக அண்மையில் அதிகாரப் பூர்வமான தகவல் வெளியானது.

இதைக் கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தில் அனிருத்    இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார்-ரஜினி இணைந்திருப்பது ரசிகர்களிடையே இத்திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் ரஜினியின் தலைவர்கள் 169 அறிவிப்பு வெளியாகிய ஒரே நாளில் 3.2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தற்போது இதையும் கடந்து பார்வையாளர்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். இது புதிய சாதனை படைத்திருக்கிறது. இதை ரசிகர்கள் சந்தோஷத்துடன் கொண்டாடி வருகிறார்கள். மேலும் தலைவரின் திரைப்பட அறிவிப்புக்கு  மட்டுமே இந்த மாதிரியான சாதனையை படைக்க முடியும் என பெருமையாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Categories

Tech |