பெங்களூரில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆவது நாள் ஏலம் இன்று துவங்கியுள்ளநிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தென் ஆப்பிரிக்க வீரர் இருவரை ஏலத்தில் எடுத்துள்ளது.
பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளும், 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இதில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலத்தில் விடப்படவுள்ளார்கள்.
இந்நிலையில் 2 ஆவது நாள் ஏலம் தற்போது துவங்கியுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தென் ஆப்பிரிக்க வீரர் இருவரை ஏலத்தில் எடுத்துள்ளது. அதாவது எய்டன் மார்க்ரமை 2.6 கோடிக்கும், மார்கோ ஜான்சனை 4.20 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.