Categories
தேசிய செய்திகள்

12 வருஷத்துக்கு ஒருமுறை….. பூக்கும் பிரம்ம கமலம்…. வீட்டில் பூத்ததால் மகிழ்ச்சி…!!!!

ஜஸ்வந்த் சிங் என்பவரது வீட்டு மூலிகை பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரிதான பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது.

சென்னை முகப்பேரில் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்வந்த் சிங் (வயது59). இவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினால் தமிழ் மொழியை எழுதப் படிக்க கற்றுக் கொண்டார். அதன்பின் இயற்கையோடு ஒன்றித்து வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் வீட்டு வளாகத்தில் செடி,கொடிகள் அரிய மூலிகைகள் கொண்ட ஒரு பூங்காவை ஏற்படுத்தினார். இவரது வீட்டு பூங்காவில் நேற்று இரவு 8 மணிக்கு அரிதான பிரம்ம கமலம் பூ பூத்தது.

இந்தப் பூ 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது. இமயமலைப் பகுதிகளில் இந்த மலர் அதிகம் இருக்கும். இளவேனிற் காலத்தில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்ட இந்த பூ நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும். மேலும் இந்த பூவில் இருந்து பிரம்மன் தோன்றினார் என்று கூறப்படுகிறது. இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால், பூ பூக்கும் போது நம் மனதில் எதை நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு.

இந்த அதிசய பூ பற்றி ஜஸ்வந்த் சிங் கூறியதாவது, கடந்த 38 வருடங்களாக எனது வீட்டு வளாகத்தில் பல்வேறு காய்கறி, பழ மரங்கள், மூலிகைகள் என 1000-க்கும் மேற்பட்ட செடி, கொடி, மரங்களை வளர்த்து வருகிறேன். இதில் 2 பிரம்ம கமலம் செடிகளும் உள்ளதாக கூறினார். கடந்த 2000-ம் ஆண்டு இந்த செடியில் நள்ளிரவு  பூ பூத்தது. அப்போது அதை சரியாக கவனிக்க தவறியதால்,இம்முறை மிகவும் கவனமுடன்   நாட்களை சரியாக கணக்கிட்டு வந்தேன்.

இந்நிலையில் செடியில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக மொட்டு முளைத்தது. இதை ஒவ்வொரு நாளும் ஆர்வமுடன் கவனித்து வந்தேன். அதேபோல் மிகச்சரியாக எதிர்பார்த்தபடி நேற்று முன்தினம் நள்ளிரவில் பூ பூத்தது. இதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்த ஜஸ்வந்த் சிங், அந்த சமயத்தில் தனது மனதில் கொரோனா இன்றி  உலக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாக கூறினார்.

Categories

Tech |