கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு நியூ காலனியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குணவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அண்ணா நகரில் இருக்கும் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்த குணவதியை அமுதா கண்டித்துள்ளார். இதனை அடுத்து கோபத்தில் அறைக்குள் சென்ற குணவதி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குணவதி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணவதியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.