காதலர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள சூளை நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சந்தீப் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் இளைச்சி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் 2 பேரும் சுமார் மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை 5 மணியளவில் 2 பேரும் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சந்தீப் மற்றும் இளைச்சியின் மீது பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இளைச்சி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சந்தீப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.