வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவர். இந்நிலையில் 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு கணசேன் வீட்டு சமையலறையில் இருந்துள்ளது. இதனைக்கண்ட குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன்பிறகு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.