வீட்டில் உள்ள சிலிண்டரை வெடிக்க வைத்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடபட்டி மேலூர் கிராமத்தில் செல்வராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரான கணேஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் மன வேதனையில் இருந்த செல்வராணி நேற்று தனது வீட்டின் சமையலறையில் உள்ள சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைத்துள்ளார். இந்நிலையில் செல்வராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த செல்வராணியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராணி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அவரது சகோதரி சுந்தரலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.