11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுவேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் முகப்பேரில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சுதா செல்போனில் விளையாட கூடாது எனக்கூறி சுவேதாவை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுவேதா அழுதுகொண்டே அறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து சுதா சுவேதாவின் அறைக்கு சென்று பார்த்தபோது தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சுதா தனது மகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சுவேதாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.