ஆளில்லா பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் இராணுவ பாதுகாப்பிற்காக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில் ஆளில்லா பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 30 நிமிடங்கள் வானில் பறக்க வைத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ஆளில்லா ஹெலிகாப்டர் 40 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 125 மைல்கள் வேகத்தில் பறந்து கச்சிதமாக மீண்டும் தரை இறங்கியது.
இந்த பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் இராணுவ பாதுகாப்பிற்காக பரிசோதிக்கப்பட்டது. மேலும் இது ஆராய்ச்சியின் திட்டத்தில் ஒரு பகுதியாகும். இந்த ஆளில்லா ஹெலிகாப்டர் கடினமான போர்க்கால சூழலில் உயிர் சேதம் ஏற்படுவதை தவிற்கும் வகையிலும், தாக்குதலை முறியடிக்கவும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வருவதாக இத்திட்டத்தின் இயக்குனர் ஸ்டூவர்ட் யங் கூறியுள்ளார்.