மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.