மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோவில் முன்பு த.மு.மு.க.வினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது த.மு.மு.க. மாநில செயலாளர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் த.மு.மு.க. வின் உறுப்பினர்கள், இளையான்குடி நகர் பொறுப்பாளர் ஜலாலுதீன், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.