Categories
தேசிய செய்திகள்

பணக்கார பெண்களுடன் டேட்டிங் பண்ணனுமா…? ஆசைப்பட்ட இளைஞருக்கு…. நடந்த விபரீத சம்பவம்….!!!

பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு இளம்பெண் ஒருவர் விளம்பரம் செய்ததுள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் பூனேவை  சேர்ந்த பெண் ஒருவர் நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் ஒன்றை செய்துள்ளார். அந்த விளம்பரத்தில் பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு அந்தப் பெண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். இந்த விளம்பரத்தை பார்த்த நபர் ஒருவர் அப்பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அட்வான்ஸாக 2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த நபரிடம் பலமுறை பணம் வாங்கியிருக்கிறார்.

இதுவரை அந்த நபரிடம் ஏமாற்றி 60 லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் போலீசில் புகார் அளித்ததால் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் வங்கி கணக்கு விவரங்களின் அடிப்படையில் அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அந்த பெண் வனவாடியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம்சாட்ட பெண் இதேபோல் வேறு யாரையாவது ஏமாற்றி இருக்கிறாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |