Categories
சினிமா தமிழ் சினிமா

இசை வெளியீட்டு விழாவில்…. எமோஷ்னலாக பேசிய பிரபல இயக்குனர்…. யாரை பற்றி தெரியுமா?…!!!

இயக்குனர் சுசீந்திரன் இசை வெளியிட்டு விழாவில் தனது அம்மா, நண்பர்கள் பற்றி எமோஷ்னலாக பேசியுள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குனர் சுசீந்திரன், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடிகுழு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது வீரபாண்டியபுரம் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில் வீரபாண்டியபுரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சுசீந்திரன், கொரோனாவால் நாம் கடந்த வருடம் பலரை இழந்திருக்கிறோம்.

அவர்களில் எனது மேனேஜர், வெண்ணிலா கபடி குழு  நிதிஷ், என்னுடைய நண்பர் கார்த்திக் என எனக்கு நெருக்கமான பலர் இறந்தார்கள். எனது அம்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது நான் மட்டும் தான் அவங்க கூட இருந்தேன். அவர் இறந்துவிட்டார் என்று  தெரிந்ததும் என்ன செய்வது என்பதே எனக்கு தெரியவில்லை.  உடல் எல்லாம்  நடுங்க ஆரம்பித்துவிட்டது எனது அப்பாவிடம் இது எப்படி சொல்ல போகிறேன் என்று பதற்றம் அதிகமாக இருந்தது. இப்படி நான் பலரது மரணத்தை தாண்டி சினிமா மீது வைத்துள்ள காதல் என்னை நடமாட வைத்தது என உருக்கமாக  பேசியுள்ளார்.

Categories

Tech |