Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ்-ஐஸ்வர்யா…. “அவர்களே சேரலாம்னு நெனச்சாலும் சிலபேரு விடமாட்டாங்க போல”…. ஏன்யா இப்படி பண்றீங்க?….!!!

தனுஷின் சில ரசிகர்கள் அவருடன் இணைந்து நடித்த நடிகைகளின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி 17 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இவர்கள் 2004-ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இப்போது திடீரென இவர்கள் பிரிவதாக சொன்னது உறவினர்கள் மற்றும் நட்புகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் இருவரும் சேர்ந்து வாழும்படி கூறிவருகின்றனர். உங்களுக்காக இல்லை என்றாலும் உங்களின் குழந்தைகளுக்காக வாழவேண்டும் என கூறுகின்றனர். இந்நிலையில் ரஜினி, ஐஸ்வர்யாவின் மீது கோபப்பட்டதால் ஐஸ்வர்யா மனம் இறங்கி தனுஷுடன் சேர்ந்து வாழ்வதாக மனம் மாறியிருக்கிறார்.தனுஷ் மனமாறுவதாக தெரியவில்லை.

இருப்பினும் இருவீட்டாரும் இவர்களை சேர்த்து வைப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதிலும் குறிப்பாக தனுஷின் அப்பாவான கஸ்தூரி ராஜா அதிதீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தனுஷின் அப்பா இருவரும் குழந்தைகளுடன் திருப்பதி சென்றுவருமாறு கூறியிருக்கின்றார். ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்தாலும் தனுஷ் ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து வற்புறுத்தியதையடுத்து தனுஷ் ஒப்புக்கொண்டார். ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் சில ரசிகர்களோ தனுஷுடன் இணைந்து நடித்த நடிகைகளுடன் இணைத்திருக்கும் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். இவர்களே சேர்ந்து வாழலாம் என நினைத்தாலும் இவர்கள் விட மாட்டாங்க போல என கூறப்படுகிறது.

Categories

Tech |