காதலர் தினத்தை முன்னிட்டு ஜெர்மனியில் ஒருவர் இதயங்களை கரையச் செய்யும் அளவிற்கு சாக்லேட்கலை செய்து வருகிறார்.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று காதலர் தினம் அமோகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜெர்மனியில் உள்ள சாக்லேட் தயாரிப்பாளரான பெர்னார்ட் ஸ்கோபன்ஸ் காதலர் தினத்தை முன்னிட்டு இதயங்களை கரையச் செய்யும் புதிய காரம், ராஸ்பெரி உலர் பழங்கள் நிறைந்த ருசியான இனிப்பான சாக்லேட்டுகளை தயாரித்து வருகிறார்.
இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் விடுதியில் பணியாற்றிய காலத்தில் மிகச் சிறந்த சாக்லேட் தயாரிப்பாளர் என்று பல விருதுகளை பெற்றுள்ளார். தற்பொழுது தனக்கென தனி சாக்லேட் கடையை பிரான்சின் அருகே அமைத்துள்ளார். மேலும் உறவுகளை இனிக்கச் செய்யும் இவருடைய சாக்லேட்டை வாங்குவதற்காக மக்கள் அவர் கடையை பல இடங்களில் இருந்து தேடி வருகிறார்கள்.