Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பமான 17 வயது சிறுமி…. கணவர் போக்சோவில் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் மாணவி பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதை அறிந்த மருத்துவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலரான கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு 17 வயது தான் ஆகிறது என்பது உறுதியானது. எனவே காவல்துறையினர் அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அருண்குமார் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |