குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகியது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பசுபதி மற்றும் பொன்னம்மாள் என்ற 2 மனைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆறுமுகத்தின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இவற்றில் விபத்தில் குடிசை வீட்டிலிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.