ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வன சாலையில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுத்தைகளை அவ்வழியே சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்தார். அது தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள வேப்பனேரி என்ற கிராமத்திற்கு செல்லும் வழியில் இரவு இரண்டு சிறுத்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதனை அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.