வாலிபரை தாக்கி பணம், செல்போனை பறித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொக்குகுளம் பகுதியில் அருணகிரி பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்பிரசாத் என்ற மகன் உள்ளார். இவர் அம்பேத்கர் நகரில் உள்ள சுடுகாட்டு பகுதியில் கஞ்சா வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 4 பேர் அருண்பிரசாத்திடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.500-யும் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அருண்பிரசாத் கழுகுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் செல்போனை பறித்து சென்றது அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் மணிகண்டன், அரவிந்தசாமி, மாரியப்பன் உள்ளிட்ட 4 பேர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.