Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அட்டகாசம்…… அச்சத்தில் வாகன ஓட்டிகள்….!!

உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் யானைகள் அவ்வப்பொழுது குறுக்கே நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உதகையிலிருந்து கோத்தகிரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் அவ்வப்போது காட்டுயானைகளும் வனவிலங்குகளும் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் குஞ்சப்பனை என்னும் பகுதியில் இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் சாலையின் குறுக்கே இரண்டு காட்டு யானைகள் சுற்றி வருகின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் அங்கு சில மணி நேரம் காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். அப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வாகனங்களை நிதானமாகவும், கவனமாகவும் ஒட்டி செல்லுமாறும் வனத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

Categories

Tech |