Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக்!…. 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் நாளான பிப்ரவரி 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17.02.2022 அன்று காலை 10 மணி முதல் 19.02.2022 நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22.02.2022 அன்று வாக்கு எண்ணுகை நடைபெறும் பகுதிகளிலும், இந்த பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |