சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் நாளை (பிப்…14) முதல் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது,
# சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் வார நாட்களில் ஒரு நாளில் 254 ரயில் சேவைகள் இயங்கும்.
# சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 84 ரயில் சேவை.
# சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 80 ரயில் சேவை
# கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் 240 புறநகர் ரயில் சேவைகள் என்று மொத்தம் 658 புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.