Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பயோ டாய்லட்” நிறம்… மனம்… இல்லாத மனித கழிவுகள்…… பொதுமக்களிடம் ரயில்வே துறை விளக்கம்….!!

சென்னை அரசு சுற்றுலா பொருட்காட்சியில் பயோ டைஜஸ்டர் டாய்லட் குறித்து விரிவான விளக்கம் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது.

சென்னை தீவுத்திடலில் 46வது சுற்றுலா பொருட்காட்சி கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசின் அனைத்துத் துறைகள் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ரயில்கள் இயக்கம் மற்றும் அதில் பயணிக்கும்  பயணிகளுக்கான வசதிகள் அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து ரயில் கழிவறைகளிலிருந்து வெளியேற்றப்படும் மனிதர்களின் கழிவுகள் நேரடியாக தண்டவாளத்தை சென்றடைந்து சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி வந்தது. இதனை தடுக்க அறிமுகம் செய்யப்பட்ட பயோ டைஜஸ்டர் டாய்லட் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. ஆகையால் இது குறித்த  விளக்கம் பொதுமக்களிடம் அளிக்கப்பட்டது.

அதில் இந்த பயோ டைஜஸ்டரில் மனித கழிவுகளை சுத்திகரிக்கும் பாக்டீரியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மனிதக்கழிவுகளை நிறமில்லாத மனமில்லாத கழிவுகளாக வெளியேற்றுகிறது. கழிவறை பிளாஸ்டிக் பாட்டில்கள் குட்கா பான் மசாலா போன்ற பொருட்கள் உள்ளிட்டவற்றை போடாமல் முறையாக பயன்படுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். இதைப் போன்றே ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களை கண்ட இடங்களில் வீசுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு குறித்தும் அதற்கான தீர்வாக ரயில் நிலையங்களில்  அமைக்கப்பட்டுள்ள பிரஷர் இயந்திரங்கள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

Categories

Tech |