Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வகுப்பறையிலேயே சில்மிஷம்…. மது போதையில் மாணவிகளை டார்ச்சர் செய்த ஆசிரியர்….. பரபரப்பு…..!!!!!

பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமம், மலையப்ப நகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இருக்கிறது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்து வரும் சின்னதுரை (42) என்பவர் பள்ளிக்கு குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவியரை வீட்டிற்கு சென்று சீருடையை மாற்றி, சாதாரண உடையில் வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து அதன்படி வந்த மாணவியரை ஆசிரியர் சின்னதுரை நடனமாட கூறினார்.

மேலும் மாணவியருடன் சேர்ந்து அவர் ஆடியதோடு, வகுப்பறை கதவை மூடி சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த மாணவியரின் பெற்றோர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின்  புகாரின்படி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சின்னதுரையை கைது செய்தனர். அதனை தொடர்ந்து ஆசிரியர் சின்னத்துரையை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |