ரஷ்யாவில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது நீச்சல் வீரர் ஒருவர் சுறா மீனை கட்டிப்பிடித்தபடி நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நெப்டியூன் வணிக வளாகத்தில் பிரமாண்டமான மீன் கண்காட்சி அமைக்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பம்சங்கள் மீன்கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அப்பொழுது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கண்ணாடி தொட்டிக்குள் நீச்சல் வீரர் ஒருவர் உள்ளே இறங்கி சுறாமீன் ஒன்றை கட்டி பிடித்து நடனமாடி பார்வையாளர்களை உற்சாகமூட்டினார். பின் செங்குத்தாக சுறாமீனை நிற்க வைத்த அந்த வீரர் அதன் துடுப்புகளை கைகளைப் போன்று பயன்படுத்தி டூயட் நடனமாடிய வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.