கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கடந்த 17 ஆண்டுகளாக சங்கராபுரம் பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இன்று வழக்கம்போல் பணிக்குச் சென்ற இவர் பேருந்தில் மல்லாபுரத்திலிருந்து சங்கராபுரம் வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது தேவபாண்டலம் பள்ளிவாசல் அருகே சென்றுகொண்டிருந்த பொது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.