கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் இவருடைய மனைவி தீபா இவர்களுக்கு பிறந்து 8 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை கடந்த இரண்டு வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளது. மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் குழந்தையை ஸ்கேன் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தபோது குழந்தையின் சுவாச குழாயில் ஊக்கு ஒன்று இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த குழந்தையின் சுவாச குழாயில் உள்ள ஊக்கை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுவாசக் குழாயிலிருந்து ஊக்கை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.