Categories
உலக செய்திகள்

“கட்டாய தடுப்பூசி வேண்டாம்”…. தலைநகரில் வலுத்த “போராட்டம்”…. திணறும் பிரதமர்….!!

ஆஸ்திரேலியாவின் தலைநகரில் கொரோனா கட்டாய தடுப்பூசிக்கு எதிராக 10,000 பேர் வரையிலான பொதுமக்கள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி அணிவகுத்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக 10,000 ரத்துக்கும் மேலான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றுள்ளார்கள். அவ்வாறு போராட்டம் நடத்திய பொதுமக்கள் கட்டாய மருந்துகள் தங்களுக்கு வேண்டாம் என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த போராட்டம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது, தற்போது கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராடும் பொதுமக்களின் மனநிலைமையை நான் உணர்ந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் செயல்படவும் நான் வலியுறுத்துகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |