Categories
விளையாட்டு கிரிக்கெட்

“தமிழ் பெண்ணை மணக்கும் கிளென் மேக்ஸ்வெல்”…. இணையத்தில் வைரலாகும் ‘மஞ்சள்’ பத்திரிக்கை….!!!!

உலகின் தலை சிறந்த வீரராக திகழ்பவர் கிளென் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச் ஆல்-ரவுண்டர் ஆவார். இவரை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎலில் 11 கோடிக்கு தக்கவைத்துள்ளது. இந்நிலையில் இவரும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண் வினி ராமனும் நீண்டகாலமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து கடந்த 2020-இல் இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததால் இந்திய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அதன் பின் வந்த கொரோனா ஊரடங்கினால் அவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வருகிற மார்ச் 27ஆம் தேதி மேக்ஸ்வெல் வினி ராமன் திருமணம் நடைபெற போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மசி படித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த திருமண ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |