இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா (ABRY) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் ஊழியரின் பிஎஃப் தொகையை அரசே செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான வேலைகளை வழங்க ஊக்குவிக்கும் என்பது அரசின் கருத்து.
இந்தத் திட்டத்தில் ஊழியரின் 24 சதவீத சம்பளத்தை அரசு வழங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெறும் ஊழியர்கள் மாத சம்பளமாக 15,000 ரூபாய் வரை மட்டுமே வாங்க முடியும். அதற்கு மேல் சம்பளம் வாங்கினால் அரசு சார்பில் வழங்கப்படும் பிஎஃப் தொகை நிறுத்தப்படும். அதோடு 10,000 ஊழியர்களுக்கு மேல் இருக்கும் நிறுவனத்தில் இந்த திட்டத்தின் பலன் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.