ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷானை அதிகத் தொகையான ரூபாய் 15.25 கோடிக்கு மும்பை அணி தக்க வைத்துக் கொண்டது.
ஐபிஎல் 15-வது சீசன், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் நேற்று பெங்களூரில் தொடங்கியது. இந்த மெகா ஏலம் இரண்டு நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பட்டியலில் 600 வீரர்கள் மொத்தம் இடம் பெற்றிருந்தனர். அதில் வெளிநாட்டை சேர்ந்த வீரர்கள் 290 பேர். 74 வீரர்கள் தொடக்க நாளில் ரூ.388.35 கோடிக்கு ஏலம் போனார்கள். இவர்களை 10 அணிகளும் சேர்த்து இந்த தொகைக்கு ஏலம் எடுத்தனர்.
இதில் சிறந்த விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனான இஷான் கிஷன் இந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்கு போனார். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 1/4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மேலும் 25 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தின் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். இவர்கள் ரூ.7.5 கோடியிலிருந்து அதற்கு மேல் உள்ள தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்கள். இதனை அடுத்து இதில் 15 பேர் இந்திய வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-3, ஆஸ்திரேலியா- 1, இங்கிலாந்து- 1, தென்னாபிரிக்கா- 1, இலங்கை-1,நியூசிலாந்து-2 போன்ற வீரர்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.
வேகப்பந்து வீரர்களான ஹர்ஷல் படேல் (பெங்களூர்) ரூ.10.75 கோடிக்கும், பெர்குசன் (குஜராத்) ரூ.10 கோடிக்கும், ரபடா (பஞ்சாப்) ரூ.9.25 கோடிக்கும், லிவிங்ஸ்டன் (பஞ்சாப்) ரூ.11.50 கோடிக்கும், ரபடா (பஞ்சாப்) ரூ.9.25 கோடிக்கும், பிரசித் கிருஷ்ணா (ராஜஸ்தான்) ரூ.10 கோடிக்கும், ஷர்துல் தாகூர் (டெல்லி) 10.75 கோடிக்கும் ஏலம் போனார்கள். தற்போது ஐபிஎல் ஏலத்தில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் பந்து வீச்சாளர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. இந்த நிலையில் இஷான் கிஷன் ஐபிஎல்லில் அதிக தொகையான ரூபாய் 15.25 கோடிக்கு ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் 15.25 கோடிக்கு மும்பை அணி அவரை தக்கவைத்துக் கொண்டது.