திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருவாரூர் மாவட்டத்தில் அரசின் வீடு கட்டும் திட்டங்களின் கீழ் 10 வட்டாரங்களில் பயனாளிகளால் கட்டப்படும் வீடுகளை அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு வீடுகளை கட்டி தர பொறியியல் பட்டபடிப்பு முடித்த ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் கட்டுமான பொறியியல் பட்டயப்படிப்பு படித்த இளைஞர்கள் ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்றுகளுடன் வருகின்ற 14-ஆம் தேதி நன்னிலம், கொரடாச்சேரி, வலங்கைமான், குடவாசல், திருவாரூர் பகுதிக்கு உட்பட்டவர்களும், வருகின்ற 15-ஆம் தேதி நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு உட்பட்டவர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இணை இயக்குனரை சந்தித்து இதுகுறித்த முழு விவரம் தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
அதோடு மட்டுமில்லாமல் வீட்டின் நிலைக்கேற்ப பயனாளிகளின் வங்கி கணக்கில் வீட்டிற்கான மானிய தொகை ரூ.2,76,570 விடுவிக்கப்படும். எனவே பயனாளிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பயனாளிகள் வங்கியில் இருந்து தொகையினை எடுத்து வழங்குவார்கள். இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் 7402607528 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.