ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது.
வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு எண்ணப்பட்டுவருகின்றது. தொடக்கத்தில் இருந்து மதியம் வரை ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் வகித்து வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக முன்னிலை வகிக்கின்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை…
முன்னிலை நிலவரம்..!
ஒன்றிய கவுன்சிலர் – 416 /5067
அதிமுக+ – 198
திமுக+ – 204
அமமுக – 3
நாம் தமிழர் – 0
பிற கட்சிகள் -6